பிரிவுகள்
அனுபவம் இறப்பு உறவுகள் கணவர் கவிதை குடும்பம் குழந்தைகள் சமுகம் சமுதாயம் தமிழ் பெண்கள் விடியல் விதவை

நீயில்லாத…

young-widow 

 

விடியலின் முன்னமே

தூக்கம் கலைத்தது கனவொன்று

மணக்கோலத்தில் உன்னை காட்டி

நீ இல்லாத திருமண நாளை நினைவுபடுத்தி…

 

உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள்  

உன் தோள் சாய்ந்து அமர்ந்திருந்த மாடிப்படிகள்

குழந்தைகளை உன் மேல் சாய்த்து நீ அமரும் ஊஞ்சல்

சட்டைமாட்டியில் உன் கட்டம் போட்ட சட்டை

அதன் பையில் அமர்ந்திருக்கும் ஊதா நிற பேனா

விஷ்ணு சக்கரமாய் உன் விரலையே சுற்றிக் கொண்டிருக்கும் வண்டி சாவி

எல்லாம் என் கண் முன்னே

உன்னை ஞாபகபடுத்திக் கொண்டு….

இவற்றுடன் நானும் இவ்வுலகில்

ஒரு அஃறிணையாய்… 

பிரிவுகள்
அனுபவம் கவிதை சமுகம் சமுதாயம் தமிழ் பொதுவானவை விடியல்

சில விடியல்களின்…

 சுகங்கள்…





கதிரவனே நான்தான் என்னும் சில விடியல்கள்
காப்பிகோப்பையுடன் பால்கனியில் சில விடியல்கள்
கனவுகளின் தாக்கத்துடன் சில விடியல்கள்

தூக்கம் சுகம் என்னும் சில விடியல்கள்
தூக்கம் கெட்டு தலைவலியுடன் சில விடியல்கள்

முன்றைய நாளின் முறைப்புகளுடன் சில விடியல்கள்
மனக் கசப்புகளுடன் சில விடியல்கள்

புரியாத உணர்வுகளுடன் சில விடியல்கள் 
புரியவைக்கும் முயற்சிகளுடன் சில விடியல்கள்
புன்சிரிப்பை எதிர்பார்த்து சில விடியல்கள்

விடியுமா என்ற கேள்விக்குறியுடன் சில விடியல்கள்
விடிந்தால்தான் உண்டு என்று சில விடியல்கள்

இன்று விடிந்தது எப்படி என்று இன்றே பார்போம்…