மன்மதன் அம்பு

இந்த படம் ஒரு melo drama மாதிரி . ரொம்ப போரடித்து விட்டார்கள். ஒரு சிறு குழந்தை கூட அடுத்த காட்சியை சொல்லிவிடும். அதற்கு ஒரு கே. எஸ். ரவிக்குமார் தேவை இல்லை. இந்த  படத்தை பற்றி எழுத பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் படத்தில் நடித்திருப்பவர்களை பற்றி எழுத நிறைய இருக்கிறது.

முதலில் கமல்

நான் ரஜினி ரசிகை. கமலையும் சில சமயங்களில் ரசிப்பதுண்டு. நல்ல நடிகர்தான். மறுப்பதிற்கில்லை. இவ்வளவு பெரிய நடிகரை படம் முழுவதும் சும்மா வந்து போக வைத்திருப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அத்தனை நடிகர்களுக்கும் இடையில் இவ்வளவு சிறுபிள்ளைதனமாக நடிக்க பிடிக்காத மாதிரி, என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துகொண்டு இருக்கிறார். பரிதாபமாக இருக்கிறது.

கமலுக்கு என் பணிவான வேண்டுகோள் : தயவு செய்து இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டாம்.

அடுத்து மாதவன்

superb!!!  படம் மாதவனுக்காக பார்க்கலாம். படம் முழுவதும் வரும் மாதவனை படத்தின் போஸ்டரில் தொலைத்துவிட்டார்கள். படத்தில் நிறைய பேசியிருப்பவரும் இவர்தான், நடித்திருப்பவரும் இவர்தான்.

த்ரிஷாவும், சங்கீதாவும் மிக அழகாக தோழிகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை வைத்து எடுக்கபட்டிருக்கும்  காட்சிகளும் இயற்கையாக இருக்கிறது.

மன்மதன் அம்பு – மனதை தொடாத அம்பு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: