பிரிவுகள்
இயற்கை பயணம்

வயநாடு பயணம்

சமீபத்தில்  வயநாடு(Wayanad), கேரளா சென்றிருந்தேன். கோழிகோடு நகரத்தில் இருந்து 76 km தூரத்தில் உள்ளது. வயநாட்டில் பார்க்க வேண்டிய இடங்களாக  பூகட் ஏரி(Pooket Lake), பானசுரசாகர் அணைக்கட்டு(Banasurasagar Dam), எடக்கல் பாறை(edakal Cave), முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்(Muthanga Wild Life Sanctuary) உள்ளது .

அழகான மலை பாதை, செங்குத்தாக ஏறுகிறது. ஒரு மலை பாதை சுற்றுக்கும் அடுத்த பாதைக்கும் பயணிக்கும் நேரம் குறைவாகவும் ஏறும் உயரம் அதிகமாகவும் உள்ளது.

பூகட் ஏரி படகு சவாரி செய்யலாம். மீன் காட்சியகம் ஒன்று உள்ளது. ஏரியை சுற்றி மரங்களும் பூக்களுமாக உள்ளது. ஊட்டி ஏரியை போல குளிராமல் வெதுவெதுப்பாக இருக்கிறது.

பானசுரசாகர் அணைக்கட்டுக்கு செல்லும் பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை. அவர்களுடைய  ஜீப்பில்தான் ஏற்றி செல்கிறார்கள். இந்த அணையை கட்டும்போது உபயோகித்த புல்டோசர் போன்ற பொருட்களை மலையிலிருந்து கீழே எடுத்து செல்ல முடியாததால் அங்கங்கே மலையிலேயே இருக்கிறது. மின் விசை படகுகளில் நம்மை அழைத்து சென்று அணைக்குள் தனி தனி தீவுகளாக இருக்கும் பாறைகளை காட்டுகிறார்கள். மிகவும் அழகாகவும் சற்று பயமாகவும் பயணம் அமைந்தது.

பானசுரசாகர் அணைக்கட்டு

அணையில் மரங்கள்